ரசிக்கலாம்… ஆனால் அளவுக்கு மீறிக் கொண்டாட வேண்டாம்!
Hair Stylist, Labourer, Supervisor, Engineer, Doctor, Nurse, Pharmacist, Storekeeper, Salesman, Mason, Tailor, Scientist, Actor, Actress, Cricketer, Footballer என எந்தத் தொழிலாக இருந்தாலும்…
எல்லாமே ஒரு வேலைதான்!
நமக்குக் கிடைத்த வாழ்க்கையும், வளர்ச்சியும் நாம் படித்த கல்வியாலோ, பெற்ற அனுபவத்தாலோ, செய்த உழைப்பாலோ கிடைத்தவை. ஒவ்வொருவரும் தங்களுக்கான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
இறுதியில் நாம் அனைவரும் மனிதர்கள்தான்!
உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். மற்றவர்களைப் பார்த்து உங்களைக் குறைவாக நினைக்காதீர்கள்.
அதேபோல், ஒருவரைப் பிடித்துவிட்டது என்பதற்காக அவர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடாதீர்கள். குறிப்பாக, பிரபலங்கள் என்று வரும்போது இன்னும் கொஞ்சம் சிந்தியுங்கள்.
அவர்களும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள்தான்.
ஒரு கிரிக்கெட் வீரருக்குக் கிரிக்கெட் விளையாடுவதற்குச் சம்பளம் கிடைக்கிறது. ஒரு நடிகருக்கு நடிப்பதற்குச் சம்பளம் கிடைக்கிறது. ஒவ்வொருவரும் தங்களுடைய திறமைக்கும் தொழிலுக்கும் ஏற்ப வருமானம் பெறுகிறார்கள்.
ஆனால், அவர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிப்பதற்குக் காரணம் என்ன?
அவர்களுக்காக நீங்கள் உருவாக்கும் வரவேற்பும், நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவமும், அவர்களுடைய திறமையைப் பார்க்க நீங்கள் செலவிடும் பணமும்தான் அவர்களின் சந்தை மதிப்பை உயர்த்துகின்றன.
ரசிப்பதில் தவறில்லை. ஆதரிப்பதிலும் தவறில்லை. ஆனால், ரசிப்பதற்காக ஒருவரை அளவுக்கு அதிகமாக உயர்த்திவிட்டு, நம்முடைய சுயமரியாதையையும் சுயசிந்தனையையும் இழந்துவிடாதீர்கள்.
பிரபலங்களை மதியுங்கள்; ஆனால் உங்களை நீங்களே மதிக்க மறந்துவிடாதீர்கள்.
பிறரைப் பார்த்து வாழ்வதைவிட, உங்களுடைய வாழ்க்கையை முன்னேற்றுவதில் கவனம் செலுத்துங்கள்.
ஏனென்றால், தொழில்கள் வேறுபடலாம்; வருமானங்கள் மாறுபடலாம்; புகழ் ஏறலாம், இறங்கலாம். ஆனால், மனிதர் என்ற அடையாளம் நம் அனைவருக்கும் ஒன்றுதான்! 💯
Hair Stylist, Labourer, Supervisor, Engineer, Doctor, Nurse, Pharmacist, Storekeeper, Salesman, Mason, Tailor, Scientist, Actor, Actress, Cricketer, Footballer — no matter what profession you choose…
At the end of the day, every profession is just a job!
The life we have and the progress we make come from our education, experience, or hard work. Each of us is travelling along our own path in life.
Ultimately, we are all human beings!
Motivate yourself. Strive to improve your life. Never think less of yourself by comparing your life with others.
Similarly, just because you like someone, don’t put them on a pedestal and celebrate them as if they are above everyone else. Think a little more critically, especially when it comes to celebrities.
They are ordinary human beings just like us.
A cricketer gets paid to play cricket. An actor gets paid to act. Everyone earns according to their skills and profession.
But what makes them earn crores of rupees?
It is the attention you give them, the welcome you offer them, the importance you attach to them, and the money you spend to watch their talent that increases their market value.
There is nothing wrong with admiring someone. There is nothing wrong with supporting them either. But don’t elevate someone so much in your admiration that you lose your own self-respect and independent thinking.
Respect celebrities, but never forget to respect yourself.
Instead of spending your life looking up to others, focus on improving your own life.
Because professions may differ, incomes may vary, and fame may rise or fall. But the identity we all share as human beings remains the same! 💯

Comments
Post a Comment